கத்தி
படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய் இன்று டுவிட்டரில்
கலந்துரையாட வந்தார். இதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள்
வாழ்த்துக்களையும், கேள்விகளையும் கேட்டன. இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். இதன் முழு விவரம் இதோ உங்களுக்காக....
விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான Vijay_cjv பக்கத்தில்
விஜய், ரசிகர்களின் கேள்விக்கு சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பதிலளிப்பார்
என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன்
காத்திருந்தார்கள். இதோ, ட்விட்டர் தளத்தில் விஜய்யிடம் ரசிகர்கள் எழுப்பிய
சில சுவாரசியமான கேள்விகளும், பதில்களும்....
கேள்வி : சமீபத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?
பதில் : ஜிகர்தண்டா மற்றும் த்ரிஷ்யம்.
பதில் :
ஆம். இது துரதிஷ்டவசமானது. இம்மாதிரி சண்டையில் ஈடுபடுவதை விடுத்து, சமூக
பிரச்சினைகளில் கவனம் செலுத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது
ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி : உங்களது ரசிகர்கள் குறித்து?
பதில் :
வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. தோல்வியில் என்னை தட்டிக்
கொடுத்தவர்கள் என் ரசிகர்கள். நடிகன் - ரசிகன் தாண்டிய உறவு எங்களுடையது.
கேள்வி : நிறைய பிரச்சினைகள் இருந்தும் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். எப்படி இந்த சக்தி?
பதில் : அமைதி தான் எப்போதுமே பெரிய சக்தி.
கேள்வி: உங்களது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : உழைத்திடு.. உயர்ந்திடு.. உன்னால் முடியும்.
கேள்வி : உங்களது எதிர்ப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : எதிரியையும் நேசிப்போம். நான் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
கேள்வி : இன்னும் 10 வருஷம் கழிச்சு எந்த இடத்தில் இருப்பீங்க?
பதில் : என் கடமையை செய்கிறேன்...வேறு எந்த ப்ளானும் இல்லை.
கேள்வி : முதலில் கோக் விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதற்கு எதிராக 'கத்தி' படத்தில் நடித்துள்ளீர்கள். ஏன் இந்த எதிர்மறை?
பதில் : மக்கள்
இதே போல அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளும்போதும் கேள்வி
எழுப்பினால் நான் மகிழ்வேன். ஆம், நான் இதற்கு முன் அந்த விளம்பரத்தில்
நடித்தேன். சச்சின், ஆமிர்கான் போன்ற மிகப்பெரிய பிரபலங்களும்
நடித்துள்ளனர். ஆனால் நான் தற்போது அந்த பிராண்டை விளம்பரப்படுத்துவதில்லை.
கத்தி கதையைக் கேட்ட போது அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது. அதை
ஜீவா கதாபாத்திரம் வழியாகப் பேசியுள்ளேன்.
பதில் :
நான் நடிக்க ஆரம்பித்தவுடன் மக்களுக்கு என்னை பிடித்து ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்று நினைத்தேன். தற்போது நான் எதிர்பார்த்தை விட மேலாக
உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. உங்களுடைய இந்த அன்பிற்கு முன்னால்
எனக்கு எந்தவொரு தலைப்பும் பெரிதாகத் தெரியவில்லை.
கேள்வி : இணையத்தில் ரசிகர்களின் சண்டைகள் அதிகரிக்கிறது. உங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்கள்
கேள்வி : முதலில் கோக் விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதற்கு எதிராக 'கத்தி' படத்தில் நடித்துள்ளீர்கள். ஏன் இந்த எதிர்மறை?
கேள்வி : சூப்பர் ஸ்டார் தலைப்பு பிடித்திருக்கிறதா... இளைய தளபதி தலைப்பு பிடித்திருக்கிறதா....??
No comments:
Post a Comment