Saturday, 16 August 2014

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையா அஞ்சான்?

10gwhu9.jpg


சென்னை: சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது ரசிகர்கள் கருத்துக்களில் இருந்து தெரிகிறது. லிங்குசாமி, சூர்யா கூட்டணியில் நேற்று வெளிநாடுகளிலும், இன்று இந்தியாவிலும் ரிலீசான திரைப்படம் அஞ்சான். மொத்தம் சுமார் 1500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டுமே 37 தியேட்டர்களில் அஞ்சான் திரை கண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீரம், ஜில்லாவுக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மற்றொரு மாஸ் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கேற்பட 'நான் புறா இல்லை, கழுகு' என்பது போன்ற பஞ்ச் வசனங்களும்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஆனால் வெளிநாட்டு இணைய நண்பர்களும், உள்ளூரில் காலையிலேயே அடித்து பிடித்து படம் பார்க்க போன ரசிகர்களும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தங்கள் எதிர்பார்ப்பை அஞ்சான் பூர்த்தி செய்யவில்லை என்பதுதான். பார்த்து பழகி, புளித்துப்போன மும்பை தாதா கதையை பின்னணியாககொண்டு அஞ்சான் படம் எடுக்கப்பட்டுள்ளது அசதியை வரவழைப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். அதே நேரம் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை பாராட்டாத ஆட்கள் இல்லை. யுவன் சங்கர் ராஜா இசை மோசமாகிவிட்டதாக விமர்சனங்கள் வெளிவருகின்றன. சமந்தா இந்த திரைப்படத்தில் இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சியை காண்பித்துள்ளார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் சமந்தாவை பார்ப்பது என்பது, பலாப்பழத்தை, தேனின் ஊரவைத்து சாப்பிடுவதை போல உள்ளதாக இணையதளநண்பர்கள் கருத்தை பகிர்ந்துள்ளனர். சிங்கம் மற்றும் சிங்கம்-2 அளவுக்கு மாஸ் திரைப்படமாக இதை பார்க்க முடியவில்லை என்பது சூர்யா ரசிகர்கள் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் போட்டிக்கு பெரிய படங்கள் இறங்காத நிலையில் முதலுக்கு மோசம் இருக்காது என்பது படக்குழுவினரின் கணிப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

A - Z Movies Index

  A      B      C      D      E       F      G      H      I      J      K      L      M      N      O       P      Q      R       S  ...